நீர்கொழும்பு, வேல்லவீதிய கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் 2,276 கிலோகிராமுக்கும் அதிகமான சட்டவிரோத பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இலங்கை கடற்படையினரும் பொலிஸாரும் இணைந்து இன்று (23) காலை மேற்கொண்ட இந்த நடவடிக்கையின்போது, பீடி இலைகளை கொண்டு வருவதற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இரண்டு டிங்கி படகுகளும், லொறி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.
டிங்கி படகுகள் மூலம் சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட பீடி இலைகள், லொறியில் ஏற்றிச் செல்வதற்காக கடற்கரையில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைப்பற்றப்பட்ட பீடி இலைகள், இரண்டு படகுகள் மற்றும் லொறி ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நீர்கொழும்பு தெல்வத்த பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.





