இலங்கையின் மொத்த உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு 2026 ஜூலை மாதத்தில் 6.591 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது என இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய தரவுகள் தெரிவிக்கின்றன.
2026 ஜூன் மாத இறுதியில் 6.458 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்த உத்தியோகபூர்வ கையிருப்பு, ஜூலை மாதத்தில் 133 மில்லியன் அமெரிக்க டொலர்களால் அதிகரித்துள்ளது.
இதன்படி, முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பில் சுமார் 2.1% அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
இதேவேளை, நாட்டின் தங்கக் கையிருப்பிலும் சிறியளவிலான அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
ஜூன் மாதத்தில் 191 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்த தங்கக் கையிருப்பு, ஜூலை மாதத்தில் 192 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின் அடிப்படையிலேயே இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.





