சமூக வலைத்தளங்களில் அண்மையில் வைரலான பூனை துன்புறுத்தல் தொடர்பான காணொளியை அடிப்படையாகக் கொண்டு 18 மற்றும் 19 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விலங்குகள் நலக் கூட்டமைப்பு (AWC) ஸ்ரீலங்கா சார்பில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், தலாத்துஓயா பொலிஸாரால் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துல்கம பிரதேசத்தைச் சேர்ந்த இருவருமே, முறைப்பாடு கிடைத்த சிறிது நேரத்திலேயே கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது, குறித்த சம்பவம் சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் இடம்பெற்றதாக தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரும் கண்டி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். மேலும், தண்டனைச் சட்டக்கோவை பிரிவு 411, பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 63(a) பிரிவு மற்றும் விலங்குகளைத் துன்புறுத்தல் தொடர்பான சட்டங்களின் கீழ் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலாத்துஓயா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.





