ரூ.60 இலட்சம் பெறுமதியான சட்டவிரோத சிகரெட்டுகளுடன் பயணி கைது

டுபாயிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட சுமார் ரூ.60 இலட்சம் பெறுமதியான வெளிநாட்டு தயாரிப்பு சட்டவிரோத சிகரெட்டுகளுடன் 30 வயதுடைய இலங்கைப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மினுவாங்கொட, திவுலப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த குறித்த நபர், இன்று (08) விமான நிலையத்தில் கடமை புரியும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

டுபாயிலிருந்து இலங்கைக்கு வந்த அவர், இரண்டு பயணப் பொதிகளில் சிகரெட்டுகளை மறைத்து வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சிகரெட் தொகையுடன் விமான நிலையத்திலிருந்து வெளியேற முற்பட்டபோது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் ஆகஸ்ட் 19ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore