கிழக்கு மாகாணத்தில் ஆங்கில ஆசிரியர்களுக்கான TOT பயிற்சி

  • ஷாதிர் ஏ ஜப்பார் –

கிழக்கு மாகாணத்தில் மாணவர்களின் ஆங்கில மொழிக் கல்வியை மேம்படுத்தும் நோக்கில், Spoken மற்றும் Listening திறன்களை மேம்படுத்துவதற்கான ஆங்கில ஆசிரியர்களுக்கான TOT Workshop 13.08.2026 அன்று கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் காத்தான்குடி மெத்தை பள்ளி வித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாணத்திலுள்ள 17 கல்வி வலயங்களைச் சேர்ந்த ஆங்கிலப் பிரிவு Zonal Coordinators, RESC Coordinators, வளவாளர்கள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட ஆங்கில ஆசிரியர்கள் இப்பயிற்சி நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நிகழ்வின் ஆரம்பத்தில் வரவேற்புரையுடன், பயிற்சியின் நோக்கம் மற்றும் எதிர்பார்க்கப்படும் பெறுபேறுகள் தொடர்பாக Mr. Sabir Musthapha, A.D – E.P அவர்களினால் விளக்கமளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, “Deconstructing Lesson-01 – A Pedagogical Guide to First Day ESL Engagement and Classroom Management” எனும் தொனிப்பொருளில் முதன்மை விரிவுரை இடம்பெற்றது. நவீன கல்வியியல் சிந்தனைகளை Activity-Based Learning முறையுடன் இணைத்து, அவற்றை ஆசிரியர்கள் தமது வகுப்பறைக் கற்பித்தல் செயற்பாடுகளில் நடைமுறைப்படுத்தும் விதம் தொடர்பாக கிழக்கு மாகாண பிரதிக் கல்விப் பணிப்பாளர் Mr. N.M. Abdul Maleek அவர்களினால் சிறப்பான நடைமுறை விளக்கங்கள் வழங்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு குழுவின் வளவாளர்களினாலும் ஏனைய 07 பாடங்களுக்கான Activity-Based Presentations முன்னெடுக்கப்பட்டன. இதன் மூலம் ஆசிரியர்களுக்கு வகுப்பறைச் செயற்பாடுகளை மாணவர் மையக் கற்றல் முறையில் முன்னெடுப்பதற்கான நடைமுறை அனுபவங்கள் வழங்கப்பட்டன.

இவ்வாறான வினைத்திறன் மிக்க TOT பயிற்சி முறைகள் பாடசாலை மட்டத்தில் முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதன் மூலம், மாணவர்களின் ஆங்கில மொழிப் பயன்பாடு மற்றும் குறிப்பாக Spoken English மற்றும் Listening Skills மேலும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இதனுடன் இணைந்து பாடசாலைகளில் இயங்கும் English Literary Associations, English Clubs மற்றும் English Camps போன்ற இணைப்பாடவிதான செயற்பாடுகளும் வலுப்படுத்தப்படும்போது, கிழக்கு மாகாண மாணவர்களின் ஆங்கிலப் பேச்சுத்திறனை மேலும் உயர்த்துவதற்கு இது சிறந்த பங்களிப்பாக அமையும் என ஏற்பாட்டாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore