கென்ய ஹெலிகொப்டர் விபத்தில் 7 பேர் பலி

கென்யாவின் சம்புரு மாநிலத்தில் ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த விமானி மற்றும் ஆறு சுற்றுலாப் பயணிகள் உட்பட ஏழு பேர் இன்று (19)உயிரிழந்தனர்.

ரொயிட்டர்ஸ் செய்தி நிறுவனத்தால் பார்வையிடப்பட்ட ஆர்ச்சர்ஸ் போஸ்ட் (Archers Post)பொலிஸ் நிலையத்தின் முதற்கட்ட அறிக்கையின்படி, இந்த ஹெலிகொப்டர் லோய்சாபா காப்பகத்தை நோக்கிப் பறந்துகொண்டிருந்த போதே விபத்துக்குள்ளாகியுள்ளது.

பொலிஸார் தெரிவிக்கையில், உயிரிழந்த சுற்றுலாப் பயணிகளின் குடியுரிமை தொடர்பான விபரங்கள் வௌியாகவில்லை.

தங்களது விருந்தினர்களை ஏற்றிச் சென்ற ஹெலிகொப்டர் ஒலோலோக்வே மலைக்கு அருகில் விபத்துக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் அந்நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore