டைமண்ட் லீக்கிலும் முதலாம் இடத்தை பெற்ற ருமேஷ் தரங்க!

சுவிட்சர்லாந்தின் லொசேன் நகரில் நடைபெற்ற டைமண்ட் லீக் தடகளத் தொடரின் 12ஆவது கட்ட ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கையின் ருமேஷ் தரங்க முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

இலங்கை நேரப்படி இன்று (22) அதிகளவில் நிறைவடைந்த இப்போட்டியில், 88.14 மீட்டர் தூரத்தைப் பதிவுசெய்து அவர் இமாலய வெற்றியைப் பெற்றுள்ளார்.

இந்த வெற்றியின் மூலம் ருமேஷ் தரங்க மூன்று டைமண்ட் லீக் போட்டிகளிலும் முதலிடத்தைப் பிடித்தமை குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும்.

இப்போட்டியில் பலத்த சவாலை விடுத்த இந்தியாவின் ஒலிம்பிக் செம்பியன் நீரஜ் சோப்ரா, 88.05 மீட்டர் திறமையை வெளிப்படுத்தி இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.

இது இந்த நடப்பு பருவத்தில் நீரஜ் சோப்ராவின் மிகச்சிறந்த திறமை வெளிப்பாடாகும்.

போட்டியின் மூன்றாம் இடத்தை 86.69 மீட்டர் தூரத்தைப் பதிவுசெய்த கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் தட்டிக்கொண்டார்.

23 வயதான ருமேஷ் தரங்க பத்திரகே, 2026 பொதுநலவாய விளையாட்டு விழாவின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியிலும் தங்கப் பதக்கத்தை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது பொதுநலவாய விளையாட்டு விழாவில் இலங்கை வென்ற 6ஆவது தங்கப் பதக்கமாகும்.

2006ஆம் ஆண்டில் பளுதூக்கும் வீரர் சிந்தன கீதால் விதானகே தங்கம் வென்றதிலிருந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு, இலங்கை அந்த விளையாட்டு விழாவில் வென்ற ஒரே தங்கப் பதக்கம் இதுவாகும்.

அதேபோல், 1950ஆம் ஆண்டில் டன்கன் வைட் நியூசிலாந்தின் ஓக்லாந்தில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டு விழாவின் 440 யார் தடை தாண்டும் ஓட்டப் போட்டியில் தங்கம் வென்று 76 ஆண்டுகளுக்குப் பிறகு, இலங்கையர் ஒருவர் அந்த விளையாட்டு விழாவில் தடகளப் போட்டியில் தங்கம் வென்ற முதல் சந்தர்ப்பமாகவும் இது வரலாற்றில் பதிவாகியுள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore