3 ஆண்டுகளுக்குப் பின்னர் அமெரிக்க வட்டி வீதம் உயர்வு – மீண்டும் அதிகரிக்க வாய்ப்பு

அமெரிக்க மத்திய வங்கி (Federal Reserve) மூன்று ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பின்னர் முதல்முறையாக தனது பிரதான வட்டி வீதத்தை 0.25 சதவீத புள்ளியால் அதிகரித்துள்ளது.

இதன்படி, முன்னதாக 3.50%–3.75% ஆக இருந்த வட்டி வீதம் தற்போது 3.75%–4.00% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 2023ஆம் ஆண்டு ஜூலைக்குப் பின்னர் இடம்பெற்ற முதலாவது வட்டி அதிகரிப்பு இதுவாகும்.

பணவீக்கம் தொடர்ந்து இலக்கை விட அதிகமாக இருப்பதே இந்த முடிவுக்கான முக்கிய காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க மத்திய வங்கியின் பணவீக்க இலக்கு 2% ஆகும்.

மத்திய வங்கி தலைவர் கெவின் வோர்ஷ், பணவீக்கம் நீண்ட காலமாக அதிக நிலையில் இருப்பதாகவும், அண்மைய தரவுகள் பணவீக்கம் எதிர்பார்த்த வேகத்தில் குறைந்து வருவதை உறுதிப்படுத்தவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த ஆண்டின் இறுதிக்குள் மற்றுமொரு வட்டி அதிகரிப்பு இடம்பெறலாம் என மத்திய வங்கியின் கொள்கைத் திட்டங்கள் சுட்டிக்காட்டுகின்றன. எனினும், எதிர்கால வட்டி தீர்மானங்கள் பொருளாதாரம், வேலைவாய்ப்பு மற்றும் பணவீக்க தரவுகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட்டி வீதம் அதிகரிப்பதால் வீட்டு அடமானக் கடன்கள், தனிநபர் கடன்கள் மற்றும் கடன் அட்டைகள் உள்ளிட்ட கடன் பெறும் செலவுகள் அதிகரிக்கக்கூடும். அதேவேளை, சேமிப்புகளுக்கான வட்டி வருமானத்தில் சாதகமான தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.

அமெரிக்க மத்திய வங்கியின் இந்த முடிவைத் தொடர்ந்து அமெரிக்க டொலர் வலுப்பெற்றதுடன், சர்வதேச நிதிச் சந்தைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore