கொழும்பு, செப். 17 – பொலிஸ் நற்சான்றிதழ் (Police Clearance Certificate) பெறுவது தொடர்பான சிக்கல்களைத் தெரிவிக்க புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் தெரிவித்துள்ளது.
24 மணி நேரமும் இயங்கும் இந்த தொலைபேசி இலக்கங்கள் ஊடாக, பொலிஸ் தலைமையகத்தின் விசேட கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொண்டு, நற்சான்றிதழ் விண்ணப்பங்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.
கணினி அமைப்பில் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக, Online முறையில் பொலிஸ் நற்சான்றிதழுக்கு விண்ணப்பிக்கும் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
Online சேவை மீண்டும் சீரமைக்கப்படும் வரை, விண்ணப்பதாரர்கள் தங்களது அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தின் ஊடாக நற்சான்றிதழுக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விண்ணப்பதாரர்களுக்கு ஏதேனும் சிக்கல்கள் அல்லது மேலதிக தகவல்கள் தேவைப்பட்டால்,
📞 071 859 59 46
📞 071 859 59 47
📞 071 859 59 48
என்ற தொலைபேசி இலக்கங்களைத் தொடர்புகொள்ளுமாறு பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தியுள்ளது.
குறிப்பு: Online விண்ணப்ப முறை மீண்டும் ஆரம்பிக்கப்படும் குறிப்பிட்ட திகதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.





