மலையகத்தில் களைகட்டும் தீபாவளி வியாபாரம்: நகரங்களில் அலைமோதும் மக்கள் கூட்டம்

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, புத்தாடைகள் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக மலையகத்தின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த பெருமளவிலான மக்கள் ஹட்டன் உள்ளிட்ட பிரதான நகரங்களை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர்.

தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், இன்று (07) முதல் ஹட்டன் நகரில் மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதை அவதானிக்க முடிந்தது.

குறிப்பாக, பெருந்தோட்டப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் குடும்பத்தினருடன் வருகைதந்து புத்தாடைகள், காலணிகள், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதேவேளை, தீபாவளி வியாபார நடவடிக்கைகளுக்காக வெளிமாவட்டங்களிலிருந்தும் பெருமளவிலான வியாபாரிகள் ஹட்டன் நகருக்கு வருகைதந்துள்ளனர். இதனால் நகரின் வர்த்தக நடவடிக்கைகளும் களைகட்டியுள்ளன.

கொழும்பில் இருந்து ஹட்டன் உள்ளிட்ட பகுதிகளுக்கு வருபவர்களுக்கு போக்குவரத்து வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளன. ஆட்டோ சாரதிகளுக்குரிய வசூலும் சிறப்பாக உள்ளது.

அதேவேளை, ஹட்டனில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக நுகர்வோர் தமது உடமைகள் மற்றும் பணம் தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறும், விபத்துகளை தவிர்த்துக்கொள்வது பற்றியும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore