மஜீட். ARM
சம்மாந்துறை மஸ்ஜிதுன் நஹர் பள்ளிவாசல் ஏற்பாட்டில், மஸ்ஜிதுன் நஹர் பிரிவிலிருந்து புதிய நம்பிக்கையாளர் சபைக்குத் தெரிவு செய்யப்பட்ட அஷ்ஷெய்க் M.Y. அஹமத் ஜுலீல் (JP) மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி அல்ஹாஜ் S.M.M. முஸ்தபா (JP, LL.B) ஆகியோரை கௌரவிக்கும் நிகழ்வு, நேற்று (06.11.2026) வெள்ளிக்கிழமை இஷா தொழுகையைத் தொடர்ந்து மஸ்ஜிதுன் நஹர் பள்ளிவாசலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
மஸ்ஜிதுன் நஹர் நிர்வாகத்தினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில், சம்மாந்துறை மஜ்லிஸ் அஷ்ஷுறாவின் அமீர் M.I. அப்துல் ஜப்பார் அவர்களும் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்ததுடன், மஹல்லாவாசிகள் மற்றும் ஊரின் முக்கிய பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்டு புதிய நம்பிக்கையாளர் சபைக்குத் தெரிவு செய்யப்பட்டவர்களைச் சிறப்பித்து அவர்களின் சேவைகளைப் பாராட்டி கௌரவித்தமையும் குறிப்பிடத்தக்கது.





