தெனியாய, பெவரலிய பகுதியில் உள்ள நீரோடையில் நீராடச் சென்ற நால்வர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நுகேகொட பகுதியிலிருந்து ஏழு பேர் கொண்ட குழுவினர் குறித்த பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில், பெவரலிய நீரோடையில் நீராடிக் கொண்டிருந்தபோதே அவர்களில் நால்வர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததையடுத்து, காணாமல் போன நால்வரையும் கண்டுபிடிப்பதற்கான தேடுதல் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.





