அநுராதபுரம் புனிதப் பகுதி அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ருவன்வெலிசாய விகாரை வளாகத்தில் தேரர்கள் முன்னெடுத்த சத்தியாக்கிரகப் போராட்டத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட தேரர்கள் குழுவினர், குறித்த அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிராக ருவன்வெலிசாய விகாரைக்கு அருகில் ஒன்றுகூடி சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதனையடுத்து, போராட்டத்தைக் கலைப்பதற்குப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதன்போது பொலிஸாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட தேரர்களுக்கும் இடையில் வாக்குவாதம் மற்றும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த அமைதியின்மையைத் தொடர்ந்து இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவினரை அந்தப் பகுதியிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அநுராதபுரம் புனிதப் பகுதி அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிரான போராட்டம் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை அப்பகுதியில் கவனத்தை ஈர்த்துள்ளது.





