வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட குட்டி யானை – உயிரைப் பணயம் வைத்து மீனவர்கள் மீட்பு!

இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் தேஸ்தா ஆற்றின் வேகமான நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட பிறந்து சில நாட்களேயான குட்டி யானையை, உள்ளூர் மீனவர்கள் ஆபத்தான முறையில் போராடி மீட்டுள்ளனர்.

ஜல்பைகுரி பகுதியில் யானைக் கூட்டம் ஒன்று ஆற்றைக் கடந்து சென்றபோது, சுமார் 3 முதல் 4 நாட்களேயான குட்டி யானை தாயிடமிருந்து பிரிந்து, பல கிலோமீற்றர் தூரம் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டது.

ஆற்றில் தத்தளித்த குட்டி யானையை கண்ட மீனவர்கள், தங்களது படகில் அதனை நோக்கிச் சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். அவர்களில் சிலர் ஆற்றில் இறங்கி குட்டியை படகுக்குள் கொண்டு வந்ததுடன், பலத்த நீரோட்டத்துக்கு மத்தியில் படகை கரைக்கு கொண்டு வர உதவினர்.

பின்னர் வனத்துறை அதிகாரிகளிடம் குட்டி யானை ஒப்படைக்கப்பட்டு, கால்நடை மருத்துவ சிகிச்சையும் வழங்கப்பட்டது. இதையடுத்து Baikunthapur வனப் பிரிவினர் குட்டியின் தாயையும் யானைக் கூட்டத்தையும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் இரண்டு மணி நேர முயற்சிக்குப் பின்னர், குட்டி யானை அதன் தாயுடன் மீண்டும் இணைக்கப்பட்டது. தாய் யானை குட்டியை ஏற்றுக்கொண்டு பாலூட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குட்டி யானையை நீண்ட நேரம் மனிதர்களிடம் வைத்திருப்பது, பின்னர் அது யானைக் கூட்டத்துடன் மீண்டும் இணையும்போது சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என்பதால், மீட்புக்குப் பின்னர் விரைவாக தாயுடன் இணைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மீனவர்களின் துணிச்சலான செயலும், வனத்துறையினரின் ஒருங்கிணைந்த நடவடிக்கையும் குட்டி யானையின் உயிரைக் காப்பாற்றியுள்ளன. 🐘❤️

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore