பொலிஸ் உத்தரவை மீறி தப்பிய சொகுசு கார் – சாரதி உட்பட மூவர் கைது

கிரிவுல்ல பகுதியில் பொலிஸார் நிறுத்துமாறு வழங்கிய உத்தரவை மீறி தப்பிச் சென்றதாகக் கூறப்படும் சொகுசு கார் ஒன்று பன்னல நகரில் வைத்து சுற்றிவளைக்கப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளது.

காரை சோதனையிடுவதற்காக பொலிஸார் சமிக்ஞை செய்த போதிலும், சாரதி வாகனத்தை நிறுத்தாமல் வேகமாகச் சென்றதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதையடுத்து பொலிஸார் காரை பின்தொடர்ந்து சென்று பலமுறை நிறுத்துமாறு அறிவுறுத்தியதாகவும், அதனையும் மீறி கார் தொடர்ந்து சென்றதால் பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் கார் தொடர்ந்து சென்ற நிலையில், பன்னல நகரில் பொலிஸ் ஜீப் உள்ளிட்ட வாகனங்களை குறுக்கே நிறுத்தி காரை மறித்து நிறுத்தியுள்ளனர்.

கார் நிறுத்தப்பட்ட பின்னரும் சாரதி கதவைத் திறக்க மறுத்ததாகவும், பொலிஸார் டி-56 துப்பாக்கிகளை காண்பித்து கதவைத் திறக்குமாறு உத்தரவிட்ட பின்னரும் அவர் மறுத்ததால், காரின் முன்பக்க இடது கதவு கண்ணாடி உடைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து காரில் இருந்த சாரதி மற்றும் இரு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சாரதியிடம் இருந்து சிறியளவிலான போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கிரிவுல்ல பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரிவுல்ல பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore