பெண்ணைக் கொ_லை செய்துவிட்டு தப்பியோடிய சந்தேகநபர்; வழியில் காட்டு யானையுடன் மோதி வைத்தியசாலையில் அனுமதி!

மஹாஇலுப்பல்லம பகுதியில் 45 வயதுடைய பெண்ணொருவரைக் கொ_லை செய்ததாகச் சந்தேகிக்கப்படும் நபர், அங்கிருந்து தப்பிச் செல்லும்போது காட்டு யானையுடன் மோதி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த கொ_லைச் சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை (27) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபருக்கும் உயிரிழந்த பெண்ணுக்கும் இடையில் ஏற்பட்ட நிதிப் பிரச்சினையே இந்தக் கொலைக்கான காரணமாக இருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த பெண்ணுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாகக் கூறப்படும் சந்தேகநபர், கூரிய ஆயுதமொன்றினால் அவரைத் தாக்கியுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்தையடுத்து அங்கிருந்து தப்பிச் சென்ற சந்தேகநபர், வழியில் காட்டு யானையுடன் மோதி காயமடைந்துள்ளார். இதனையடுத்து அவர் எப்பாவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், சந்தேகநபர் விஷம் அருந்தியுள்ளதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட பெண் மஹாஇலுப்பல்லம பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். எனினும், சந்தேகநபரின் அடையாளம் மற்றும் வயது தொடர்பான விபரங்களை பொலிஸார் இதுவரை வெளியிடவில்லை.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எப்பாவல பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore