1983 கறுப்பு ஜூலைச் சம்பவம் குறித்து ஆராய 11 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு நியமனம்!

1983ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற கறுப்பு ஜூலை துயரச் சம்பவம் மற்றும் அதன் தாக்கங்கள் குறித்து விரிவான ஆய்வொன்றை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா போல்ராஜ் தலைமையில் 11 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இன்று (28) பாராளுமன்றத்தில் அறிவித்த சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன, குறித்த தெரிவுக்குழுவின் பணிகள் மற்றும் நோக்கங்கள் தொடர்பான விபரங்களைத் தெரிவித்தார்.

இதன்படி, 1983ஆம் ஆண்டு இடம்பெற்ற கறுப்பு ஜூலைச் சம்பவத்தின் பின்னணி, அதன் விளைவுகள் மற்றும் நாட்டின் சமூக, பொருளாதார, தேசிய நல்லிணக்கக் கட்டமைப்பில் அது ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்து விரிவான ஆய்வொன்றை மேற்கொள்வதே இத்தெரிவுக்குழுவின் முக்கிய நோக்கமாகும்.

மேலும், இந்தச் சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நிவாரணம் வழங்குவதற்கான வழிமுறைகள் மற்றும் நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் தமது யோசனைகள், பரிந்துரைகளைப் பாராளுமன்றத்திற்குச் சமர்ப்பிக்கவும் குழுவுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் இடம்பெற்ற இன வன்முறைகள் இலங்கையின் வரலாற்றில் ஆழமான பாதிப்புகளை ஏற்படுத்திய முக்கியமான துயரச் சம்பவமாகக் கருதப்படுகின்றன. இச்சம்பவம் தொடர்பில் உண்மைகளைக் கண்டறிதல், அதன் நீண்டகால விளைவுகளை மதிப்பிடுதல் மற்றும் எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாமல் தடுப்பதற்கான பரிந்துரைகளை முன்வைத்தல் ஆகியவை இத்தெரிவுக்குழுவின் ஆய்வுப் பணிகளில் முக்கிய இடம்பிடிக்கவுள்ளன.

இது தொடர்பான தெரிவுக்குழுவை நியமிப்பதற்கான பிரேரணை 2026 நவம்பர் 03ஆம் திகதி பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore