6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் விசாரணை: சுஷாந்த் சிங் ராஜ்புத் முன்னாள் மேலாளர் மரணம் தொடர்பில் CBI நடவடிக்கை

இந்திய நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் மேலாளர் திஷா சாலியன் மரணம் தொடர்பான வழக்கில், மத்திய புலனாய்வுப் பிரிவு (CBI) புதிய FIR ஒன்றைப் பதிவு செய்து விசாரணையை ஆரம்பித்துள்ளது.

திஷா சாலியன் கடந்த 2020 ஜூன் 8ஆம் தேதி மும்பையின் மலாட் பகுதியில் உள்ள உயரமான கட்டடத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். அவரது மரணம் தொடர்பாக ஆரம்பத்தில் Accidental Death Report (ADR) மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், திஷாவின் மரணம் தொடர்பான சூழ்நிலைகளை விரிவாக விசாரணை செய்யுமாறு மும்பை உயர் நீதிமன்றம் CBI-க்கு உத்தரவிட்டதைத் தொடர்ந்து இந்த புதிய FIR பதிவு செய்யப்பட்டுள்ளது.

திஷாவின் தந்தை சதீஷ் சாலியன், தனது மகளின் மரணம் தொடர்பில் சந்தேகங்கள் இருப்பதாக தெரிவித்து, புதிய விசாரணையை கோரியிருந்தார். உயர் நீதிமன்றமும் முன்னைய விசாரணையில் சில விடயங்கள் தொடர்பாக கேள்விகளை எழுப்பியிருந்தது.

இதற்கிடையில், CBI அதிகாரி சீமா பஹுஜா இந்த புதிய விசாரணையை மேற்பார்வையிட நியமிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

திஷா சாலியன் உயிரிழந்த சில நாட்களுக்குப் பின்னர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தும் உயிரிழந்திருந்ததால், இரு சம்பவங்களும் தொடர்புடையதா என்ற பல்வேறு கருத்துகள் கடந்த ஆண்டுகளில் வெளியாகியிருந்தன. எனினும், இரு மரணங்களுக்கும் இடையில் தொடர்பு இருப்பது இதுவரை விசாரணைகளால் நிரூபிக்கப்படவில்லை.

CBI-யின் புதிய விசாரணை மூலம் திஷா சாலியனின் மரணத்தைச் சுற்றியுள்ள அனைத்து அம்சங்களும் மீண்டும் ஆராயப்படவுள்ளன.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore