செப்டம்பரில் இலங்கைக்கு வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை கடந்தது

இலங்கைக்கு செப்டம்பர் மாதத்தின் முதல் மூன்று வாரங்களில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் (SLTDA) சமீபத்திய தரவுகளின்படி, செப்டம்பர் மாதத்தின் முதல் மூன்று வாரங்களில் மாத்திரம் 107,093 சர்வதேச சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இதனையடுத்து, 2026ஆம் ஆண்டில் ஜனவரி முதல் செப்டம்பர் வரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,642,215 ஆக அதிகரித்துள்ளது.

செப்டம்பர் மாதத்தில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த நாடாக இந்தியா தொடர்ந்தும் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் இருந்து 32,536 பேர் இலங்கைக்கு வருகை தந்துள்ளதுடன், இது செப்டம்பர் மாத மொத்த வருகைகளில் சுமார் 30 சதவீதமாகும்.

இதனைத் தொடர்ந்து,

🇬🇧 இங்கிலாந்து – 7,906 பேர்
🇦🇺 அவுஸ்திரேலியா – 7,393 பேர்
🇨🇳 சீனா – 6,409 பேர்
🇩🇪 ஜெர்மனி – 5,440 பேர்

என்ற அடிப்படையில் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

இதேவேளை, 2026 ஜனவரி முதல் செப்டம்பர் வரையான காலப்பகுதியிலும் இந்தியா 418,019 சுற்றுலாப் பயணிகளுடன் இலங்கையின் முக்கிய சுற்றுலா சந்தையாக முதலிடத்தில் உள்ளது.

அதே காலப்பகுதியில் இங்கிலாந்தில் இருந்து 157,895 பேரும், சீனாவில் இருந்து 107,237 பேரும், ஜெர்மனியில் இருந்து 95,441 பேரும், அவுஸ்திரேலியாவில் இருந்து 83,431 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore