FCID முன்னிலையில் முன்னாள் முதற்பெண் சிராந்தி ராஜபக்ஷ ஆஜராகவில்லை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியும் முன்னாள் முதற்பெண்ணுமான சிராந்தி ராஜபக்ஷ, இன்று (24) பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு (FCID) முன்னிலையில் ஆஜராகவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர் தற்போது சிகிச்சைக்காக சிங்கப்பூரில் தங்கியிருப்பதால், மாற்றுத் திகதியொன்றை வழங்குமாறு அவரது தரப்பினரால் எழுத்துமூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

‘சிரிலிய சவிய’ நிதியத்தின் கணக்குடன் தொடர்புடையதாகக் கூறப்படும் நிதிப் பரிவர்த்தனைகள் மற்றும் முறைகேடுகள் தொடர்பான விசாரணைகளுக்காக, இன்று FCID முன்னிலையில் ஆஜராகுமாறு சிராந்தி ராஜபக்ஷவுக்கு முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அவரது தரப்பிலிருந்து முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கையைத் தொடர்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் FCID தீர்மானிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore