மலையகத்தில் தொடரும் சீரற்ற வானிலை – ஹட்டன், நுவரெலியா கல்வி வலய பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

மலையகத்தில் தொடரும் சீரற்ற வானிலை காரணமாக, ஹட்டன் மற்றும் நுவரெலியா கல்வி வலயங்களுக்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (25) விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை முதல் பெய்து வரும் பலத்த மழை காரணமாக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண கல்விச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மத்திய மாகாணத்தின் ஏனைய கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளை நாளை நடத்துவதா அல்லது இல்லையா என்பது தொடர்பான தீர்மானத்தை, சம்பந்தப்பட்ட கல்வி வலய அதிகாரிகள் நிலவும் வானிலை நிலைமையை கருத்திற்கொண்டு மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

🌧️ மலையகப் பகுதிகளில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore