ChatGPT உடன் கூட்டாண்மையை அறிவித்த சச்சின் டெண்டுல்கர்

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், OpenAI நிறுவனத்துடன் கூட்டாண்மையொன்றை அறிவித்துள்ளார்.

தாம் ChatGPT-ஐ எவ்வாறு பயன்படுத்துகிறேன் என்பதை மேலும் ஆராய்ந்து, அதில் பயனுள்ளதாகக் கண்டறியும் விடயங்களைப் பகிர்ந்து கொள்ளவுள்ளதாக சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளப் பதிவொன்றில் அவர், ChatGPT தனது ஆர்வத்தையும் புதிய விடயங்களை அறிந்துகொள்ளும் ஆவலையும் தூண்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, குடும்பப் பயணத்தைத் திட்டமிடுவது உள்ளிட்ட நடைமுறை தேவைகளுக்கும் ChatGPT உதவியதாக அவர் தெரிவித்துள்ளார்.

“ChatGPT மூலம் மேலும் என்ன செய்ய முடியும் என்பதை அறிந்துகொள்வதற்கும், பயனுள்ளதாக இருப்பவற்றைப் பகிர்ந்து கொள்வதற்கும், மக்கள் தங்களுக்கு விருப்பமான விடயங்களில் ChatGPT-ஐ முயற்சிக்க ஊக்குவிப்பதற்கும் எதிர்பார்த்துள்ளேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டாண்மையின் மூலம் சில சுவாரஸ்யமான திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் சச்சின் டெண்டுல்கர் குறிப்பிட்டுள்ள போதிலும், அவை தொடர்பான மேலதிக விவரங்களை அவர் வெளியிடவில்லை.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore