தில்சாத் பர்வீஸ்
சம்மாந்துறையில் சமூகத்திற்காகத் தம்மை அர்ப்பணித்து நீண்டகாலம் சேவையாற்றிய 60 வயதுக்கு மேற்பட்ட உலமாக்களைக் கௌரவிக்கும் நிகழ்வு (18) சனிக்கிழமை சம்மாந்துறை மஸ்ஜிதுல் அன்வர் பள்ளிவாசலில் நடைபெற்றது.
நிகழ்வின் அனைத்து புகைப்படங்களையும் பெற்றுக்கொள்ள : CLICK_HERE
சம்மாந்துறை ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி எம்.எல்.எச். பசீர் மதனியின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சமூக மற்றும் சமயப் பணிகளில் நீண்டகாலம் ஈடுபட்டு வந்த சுமார் 36 உலமாக்களுக்கு நினைவுச் சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
சமூகத்தின் ஆன்மிக வழிகாட்டலிலும், சமயக் கல்வியை வளர்ப்பதிலும், மக்களின் நல்வாழ்வுக்காகவும் தமது வாழ்நாளின் பெரும்பகுதியை அர்ப்பணித்த உலமாக்களின் சேவைகளைப் பாராட்டும் நோக்கில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சம்மாந்துறையில் முதன்முறையாக முன்னெடுக்கப்பட்ட இக்கௌரவிப்பு நிகழ்வில், சம்மாந்துறை ஜம்மியத்துல் உலமா சபையின் உப தலைவர் மௌலவி கே.எல்.ஆதம்பாவா (மதனி), சம்மாந்துறை மஜ்லிஸ் அஷ்ஷுறா அமீர் ஐ.எல்.அப்துல் ஜப்பார், பிரபல வர்த்தகர் ஏ.எல்.எம். மாஹிர் (மதனி), சம்மாந்துறை ஜம்மியத்துல் உலமா சபையின் செயலாளர் எஸ்.எல்.எம்.றிஸ்வான் (முப்தி), சம்மாந்துறை ஜம்மியத்துல் உலமா சபையின் பொருளாளர் ஐ.எம்.இஸ்மாயில், சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை தலைவர் கே.எம்.கே.ஏ.றம்சின் காரியப்பர், சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை செயலாளர் எம்.ஐ.எம். இஸ்ஹாக் (நளீமி), மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவலகள் திணைக்களம் ஏ.சுபைதீன், முன்னாள் சம்மாந்துறை மஜ்லிஸ் அஷ்ஷுறா அமீர் எம்.ஐ. அமீர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
சமூகத்திற்காக நீண்டகாலம் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய மூத்த உலமாக்களின் சேவைகளை அங்கீகரித்து, அவர்களுக்குரிய மரியாதையை வழங்கும் வகையில் இந்நிகழ்வு அமைந்தமை குறிப்பிடத்தக்கது.





