நானுஓயா கார்லிபேக் சமர்செட் தேநீர் மையம் வெள்ளத்தில் மூழ்கியது

தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக நுவரெலியா மாவட்டத்தில் உள்ள பல இடங்கள் நீரிழ் மூழ்கியுள்ளன கார்லிபேக் பகுதிகளில் நேற்று பகல் முதல் மழை பெய்துள்ளது. பெய்து வரும் கனமழை காரணமாக, கார்லிபேக் பிரதேசத்துக்கு செல்லும் வீதி மற்றும் சமர்செட் தேநீர் மையம் நீரில் ( Somerset Tea Center ) மூழ்கியுள்ளது குறிப்பிடத்தக்கது

மேலும் நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 476/ஏ கிரிமிட்டி கிராம உத்தியோகத்தர் பிரிவில் கார்லிபேக் சமர்செட் தேநீர் மையம் மற்றும் அன்மித்த வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் பிர­தேச மக்­களும் பாரிய அசௌ­க­ரி­யங்­க­ளை எதிர் நோக்கி வருகின்றனர் . இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது

இவ் பகுதியில் பெய்த கன மழையினால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக நுவரெலியா – ஹட்டன் பகுறுக்கு வீதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதில் நானுஓயா ரதல்ல குறுக்கு வழியில் போக்குவரத்து செய்யும் பிரதான வீதி ஊடாக வெள்ள நீரினால் நிரம்­பி­யதால் நுவரெலியா – ஹட்டன்  பிர­தான வீதி­யில் போக்­கு­வ­ரத்தும் சில மணி நேரம் பாதிக்­கப்­பட்­டது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore