அநுராதபுரம் – மதவாச்சி வீதியில் ரம்பேவ பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளன. இதனைத் தொடர்ந்து, அவ்விரு பேருந்துகளில் ஒன்றுடன் தனியார் பேருந்து ஒன்றும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் உடனடியாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்துக்கான காரணம் மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.





