தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மல்வத்தை AgroTech Park வளாகத்தில் சர்வதேச உயிர்க்கோளக் காப்பகங்கள் தினம் அனுஷ்டிப்பு!

உயிர்ப்பல்வகைமைப் பாதுகாப்பு, நிலைத்தன்மை மற்றும் இயற்கை மரபுரிமையைப் பாதுகாப்பதில் உயிர்க்கோளக் காப்பகங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில், சர்வதேச உயிர்க்கோளக் காப்பகங்கள் தினம் – 2026, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மல்வத்தை AgroTech Park வளாகத்தில் கடந்த நவம்பர் 3ஆம் திகதி அனுஷ்டிக்கப்பட்டது.

UNESCO-வின் அனுசரணையில், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தின் உயிரியல் முறைமைகள் தொழில்நுட்பப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, அப்பிரிவின் தலைவர் பேராசிரியர் டாக்டர் ஏ.டி.என்.டி. குமார தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றியதுடன், நிகழ்வின் ஒரு அங்கமாக மரக்கன்றொன்றையும் நாட்டி வைத்தார்.

மேலும், சம்மாந்துறை பிரதேச சபையின் உறுப்பினர் சீ. டனேஜன், பிரதேச சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தர்களான எம்.எம்.எம். முஸ்தபா மற்றும் டி. சங்கீதன் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

“உயிர்வாழும் நிலப்பரப்புகள்: மீள்திறன் மிக்க உயிர்க்கோளக் காப்பகங்களுக்கான உயிரியல் முறைமைத் தீர்வுகள்” (Living Landscapes: Biosystems Solutions for Resilient Biosphere Reserves) என்ற தொனிப்பொருளில் இந்நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, நிலையான எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கும், இயற்கை வளங்கள் மற்றும் உயிர்ப்பல்வகைமையைப் பாதுகாப்பதற்கும் புத்தாக்கமான உயிரியல் முறைமைத் தீர்வுகளை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.

அத்துடன், இயற்கைச் சூழலைப் பாதுகாப்பதிலும், சுற்றுச்சூழல் சமநிலையைப் பேணுவதிலும் உயிர்க்கோளக் காப்பகங்கள் ஆற்றும் முக்கிய பங்களிப்பு குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore