மக்களின் நம்பிக்கைக்கு மதிப்பளித்து சேவையாற்ற வேண்டும்; 2027 வரவு செலவுத் திட்டத்துக்கு றிஸ்விகான் முழுமையான ஆதரவு!

சம்மாந்துறை பிரதேச மக்கள் தம்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கும், ஒப்படைத்துள்ள பொறுப்புக்கும் மதிப்பளித்து, மக்களின் நலன்களை முன்னிறுத்தி அனைவரும் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் சேவையாற்ற வேண்டும் என சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினர் றிஸ்விகான் தெரிவித்தார்.

சம்மாந்துறை பிரதேச சபையின் ஐந்தாவது கூட்டத்தொடரின் 17ஆவது அமர்வு கடந்த 10ஆம் திகதி பிரதேச சபையில் நடைபெற்றது. இதன்போது, 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், மக்கள் தம்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு ஏற்ப அனைத்து உறுப்பினர்களும் கட்சி வேறுபாடுகளைக் கடந்து ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். மக்கள் ஒப்படைத்துள்ள பொறுப்பை உணர்ந்து, அவர்களின் தேவைகளுக்கும் நலன்களுக்கும் முன்னுரிமையளித்து சேவைகளை முன்னெடுப்பது அவசியமாகும் என்றார்.

மேலும், 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பெண்களின் முன்னேற்றம், விசேட தேவையுடையோரின் நலன்புரி, சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் முன்னேற்றம் உள்ளிட்ட சமூக நலத்திட்டங்களுக்காக 2.3 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அஹதிய்யா மற்றும் அறநெறிப் பாடசாலைகளை வலுப்படுத்துவதற்காக 0.75 மில்லியன் ரூபாவும், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் தாய்சேய் பராமரிப்பு, விழிப்புணர்வுக் கருத்தரங்குகள், போசாக்குணவு வழங்குதல் போன்ற செயற்பாடுகளுக்காக 0.5 மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், மக்களின் எதிர்பார்ப்புகளையும் தேவைகளையும் கருத்திற்கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தைச் சபையின் அனைத்து உறுப்பினர்களின் சார்பிலும் தாம் முழுமனதுடன் ஆதரிப்பதாகவும் றிஸ்விகான் தனது உரையில் மேலும் தெரிவித்தார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore