திருகோணமலையில் ரயிலில் மோதி இருவர் உயிரிழப்பு; ஒருவர் படுகாயம்!

திருகோணமலை மீன்பிடித் துறைமுகத்திற்கு அருகில் இடம்பெற்ற ரயில் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.

திருகோணமலையிலிருந்து கொழும்பு நோக்கி இன்று இரவு பயணித்துக்கொண்டிருந்த ரயிலில் மோதுண்டு மூவரும் விபத்துக்குள்ளாகியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் தேவேந்திரமுனை பகுதியைச் சேர்ந்தவர்கள் என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்தில் படுகாயமடைந்த நபர் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore