நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் தாதியர் சங்கத்தினர் போராட்டம்!

2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாடளாவிய ரீதியில் தொழிற்சங்கப் போராட்டங்களை முன்னெடுக்க பல தொழிற்சங்கங்கள் தீர்மானித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு ஆதரவாக அரச தாதியர் சங்க உறுப்பினர்கள் இன்று (23) மதிய உணவு வேளையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் பங்கேற்ற தாதியர் சங்கத்தினர் தற்போது அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு தாங்கள் பெறும் சம்பளம் போதுமானதாக இல்லை என்றும், இந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் தங்களது சம்பளத்தை உயர்த்தவோ அல்லது வாழ்க்கைச் செலவுகளைக் குறைக்கவோ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கூறினர்.

மேலும் அனைத்து அரச ஊழியர்களுக்கும் 25,000 ரூபாய் இடைக்காலக் கொடுப்பனவை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore