2026 உயர்தர சாதாரண தரப் பரீட்சை: டிசம்பர் 02 முதல் மேலதிக வகுப்புகளுக்கு தடை!

2026 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை முன்னிட்டு, மேலதிக வகுப்புகளை நடத்துவதற்கு டிசம்பர் 02 ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்தினால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த காலப்பகுதியில் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள் மட்டுமன்றி, பாடரீதியான விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 08 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

எனவே, குறித்த அறிவுறுத்தல்களைப் பின்பற்றி செயற்படுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore