அக்கரைப்பற்று எறகாமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் கடுமையான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், பிரதான சந்தேகநபரான 21 வயதுடைய மௌலவி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்திற்குப் பின்னர் தலைமறைவாக இருந்த குறித்த மௌலவி, கடந்த மே 20 ஆம் திகதி சட்டத்தரணி ஊடாக அம்பாறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
இதனையடுத்து, அவர் 2026 ஜூன் 03 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, பிரதான சந்தேகநபருக்கு உதவி செய்ததாகக் கூறப்படும் எறகாமத்தைச் சேர்ந்த மற்றொரு 21 வயது இளைஞர் கடந்த மே 09 ஆம் திகதி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தார்.
அவரும் ஜூன் 03 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எறகாம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 🚔⚖️





