“யாவருக்கும் உறையுள்”: OCD அமைப்பின் 17வது வீட்டிற்கான அடிக்கல் நடும் விழா

“யாவருக்கும் உறையுள்” எனும் தொனிப்பொருளில், ஓ.சி.டி (OCD) அமைப்பினால் நிர்மாணிக்கப்படவுள்ள 17 ஆவது மாதிரி வீட்டிற்கான அடிக்கல் நடும் நிகழ்வு (31) நடைபெற்றது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மலையடி வட்டார பிரதேச சபை உறுப்பினரும், ஆசிரியருமான கௌரவ அப்துல் காதர் முகம்மட் நயீம் அவர்களின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இவ்விழாவிற்கு பிரதம அதிதியாக OCD அமைப்பின் தலைவரும், விஞ்ஞான முதுமானியும், சமூக சேவையாளரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினருமான அஸ்மின் யாசின் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

மேலும், இந்நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர்களான அமீர் அப்னான், யூசுப் பஸீர் ஆகியோருடன், தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் அவர்களின் ஒருங்கிணைப்பாளர்களான மௌலவி அப்துல் முனாப் (ஆசிரியர்), எம்.ரி.எம். பாயிஸ், ஏ.பி. பௌசான் மற்றும் உலமாக்கள், OCD அமைப்பின் உயர்பீட உறுப்பினர்கள், சமூக சேவையாளர்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், பிரதேச பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இவ்வீடானது திட்டமிட்டபடி இன்னும் மூன்று மாத காலத்திற்குள் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டு, தகுதியான பயனாளியிடம் முறைப்படி கையளிக்கப்படும் என அமைப்பின் தலைவர் இதன்போது தெரிவித்தனர்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore