பொலன்னறுவையிலிருந்து திஹியத்தகண்டிய நோக்கி பயணித்த வேன் ஒன்று காட்டு யானையுடன் மோதியதில் 54 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், 15 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று அதிகாலை பந்தனகல பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் திஹியத்தகண்டிய, நாகமுவ பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சிறிபுர பொலிஸாரின் தகவலின்படி, நாகஸ்தென்ன பகுதியைச் சேர்ந்த 16 உறவினர்கள் பொலன்னறுவை யாத்திரையை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த வேளையில், பிரதான வீதியை கடக்க முயன்ற காட்டு யானையுடன் வேன் மோதியுள்ளது.
விபத்தில் 5 வயது சிறுவனும், 10 மாதக் குழந்தையும் உட்பட 15 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்களில் 10 பேர் திஹியத்தகண்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், ஆபத்தான நிலையில் இருந்தவர்கள் பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சிகிச்சை பெற்று வந்த நிலையில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.





