சர்வதேச சாதனையாளர்களுக்கு ரூ.61.38 மில்லியன் பரிசுத் தொகை வழங்கிய அரசு

2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளில் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் சாதனை படைத்த வீரர், வீராங்கனைகள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களுக்கு மொத்தமாக ரூ.61.38 மில்லியன் நிதி ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே தலைமையில் நேற்று (02) நடைபெற்ற நிகழ்வில், 37 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் இந்தப் பரிசுத் தொகைகளை பெற்றுக்கொண்டனர்.

2024 ஜப்பானில் நடைபெற்ற உலக பாரா தடகள சாம்பியன்ஷிப், 2024 பாரிஸ் பாராலிம்பிக் போட்டிகள், 2025 இந்தியாவில் நடைபெற்ற உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் மற்றும் 2025 பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டிகளில் சிறந்து விளங்கியவர்களுக்கே இந்த நிதி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

இதில், பாரிஸ் பாராலிம்பிக் ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற கே.ஏ. சமித துலன், அதிகபட்சமாக ரூ.15 மில்லியன் பரிசுத் தொகையை பெற்றார்.

அதேவேளை, பஹ்ரைனில் நடைபெற்ற ஆசிய இளைஞர் விளையாட்டுப் போட்டியின் 1,500 மீற்றர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஜி.எல். லஹிரு அச்சிந்த ரூ.5 மில்லியன் பரிசுத் தொகையை பெற்றுக்கொண்டார்.

சர்வதேச மட்டத்தில் இலங்கை வீரர்களின் சாதனைகளை ஊக்குவிப்பதற்கும், “Mission Olympic 2028” திட்டத்தின் இலக்குகளை அடைவதற்கும் இந்த நிதி ஊக்குவிப்பு திட்டம் உதவும் என விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore