யாழ்ப்பாணத்தில் LTTE அமைப்பை புகழும் வகையில் பாடல்கள் பாடியதாக சந்தேகிக்கப்படும் சம்பவத்தில், 24 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சி, உதயநகர் பகுதியைச் சேர்ந்த இவர், மே 31ஆம் திகதி சாவகச்சேரி – நவக்குளி பகுதியில் நடைபெற்ற இசை நிகழ்வில் LTTE-ஐ புகழும் பாடல்களை பாடியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவு மேற்கொண்ட விசாரணையில், நிகழ்வில் பாடப்பட்ட 4 பாடல்களை திருத்தி (edit செய்து) தனது TikTok கணக்கில் பதிவேற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த பதிவுகள் LTTE-க்கு ஆதரவானவையாக காட்டப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் கைது செய்யப்பட்டு, அவரது மொபைல் போனுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
தீவிரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) பிரிவு 03(g) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவர் 2026 ஜூன் 17 வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் யாழ்ப்பாண மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவு மற்றும் சாவகச்சேரி பொலிஸார் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்





