தோனி, கோலியை முந்திய 3 வீரர்கள்!

இந்திய டி20 அணியின் கேப்டன்சியில் மாற்றம் ஏற்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், ஸ்ரேயாஸ் ஐயர் புதிய அணி தலைவராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

தற்போதைய அணி தலைவரான சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி டி20 உலகக் கிண்ணத்தை வென்று சாதனை படைத்துள்ள சூழலில், கேப்டன்சி மாற்றம் குறித்த தகவல்கள் கிரிக்கெட் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளன.

இந்த நிலையில், குறைந்தபட்சம் 10 டி20 போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்திய அணி தலைவர்களில் அதிக வெற்றி சதவீதம் கொண்ட முதல் 3 வீரர்களை பார்க்கலாம்.

ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் முழுநேர அணி தலைவராக இல்லாவிட்டாலும், பல்வேறு தொடர்களில் அணியை வெற்றிகரமாக வழிநடத்தியுள்ளார். கேப்டனாக 16 போட்டிகள் விளையாடிய இவர் அதில் 10 வெற்றிகள் 5 தோல்விகளுடன் 62.5 வெற்றி சதவீதம் கொண்டுள்ளார்.

ரோகித் சர்மாவின் ஓய்வுக்கு பிறகு டி20 அணியின் பொறுப்பை ஏற்ற சூர்யகுமார் யாதவ், தனது தலைமையில் பல முக்கிய வெற்றிகளை இந்தியாவுக்கு பெற்று தந்துள்ளார். அணி தலைவராக 52 போட்டிகளில் 40 வெற்றிகள் 8 தோல்விகள் கண்டு 76.92 வெற்றி சதவீதம் கொண்டுள்ளார்.

ரோகித் சர்மா இந்திய டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக வெற்றி சதவீதம் கொண்ட அணி தலைவராக முதலிடத்தில் உள்ளார். அணி தலைவராக 62 போட்டிகள் விளையாடி 49 வெற்றிகள் பெற்று 79.03 வெற்றி சதவீதம் வைத்துள்ளார்.

இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான அணி தலைவராக தெரிவிக்கப்படும் தோனி, கோலிக்கு இந்த பட்டியலில் முதல் மூன்று இடங்களுக்குள் இடம்பெறவில்லை.

எம்.எஸ். தோனி 72 போட்டிகள் விளையாடி 56.94 வெற்றி சதவீதம் வைத்துள்ளார். விராட் கோலி 50 போட்டிகள் விளையாடி 60 வெற்றி சதவீதம் வைத்துள்ளார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore