பல்கலைக்கழக மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்ததாக தம்பதி உட்பட இளைஞன் கைது!

சம்மாந்துறையில் வெளியூர் பல்கலைக்கழக மாணவர்களுக்கும், வெளிப்புற நபர்களுக்கும் ஐஸ் போதைப்பொருள் விற்பனை செய்ததாக சந்தேகிக்கப்படும் 3 பேர் சான்று பொருட்களுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் நிந்தவூர் – அட்டப்பாளம் பகுதியைச் சேர்ந்த 33 வயது மனைவி மற்றும் 40 வயது கணவர் ஆகிய தம்பதியரும், மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த 23 வயது இளைஞரும் ஆவர்.

ஆரம்பத்தில் குறித்த 23 வயது இளைஞர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதை தொடர்ந்து, அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில் தம்பதியரும் ஐஸ் வகை போதை பொருட்களுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விசாரணைகளில், சந்தேகநபர்கள் சம்மாந்துறையில் இருந்து கொண்டு வெளிப்புற பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு போதைப்பொருள் விநியோகம் செய்து வந்ததாக தெரியவந்துள்ளது.

மேலும், யார் யாருக்கு போதைப்பொருள் வழங்கப்பட்டது என்பது தெளிவாக தெரியாமல், பணப் பரிவர்த்தனைகள் வங்கிக் கணக்குகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு, நீண்ட காலமாக இந்த விற்பனை நடவடிக்கை நுணுக்கமாக நடந்து வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன்போது 2 மோட்டார் சைக்கிள்கள் , தொலைபேசிகள் , வங்கி புத்தகங்கள் மற்றும் போதைப்பொருட்கள் உட்பட சான்று பொருட்களும் கைப்பற்றப்பட்டு மேலதிக விசாரனைகளுக்காக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த கைது நடவடிக்கை கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே. இப்னு அசார் அவர்களின் ஆலோசனைக்கு அமைய,
சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமார அவர்களின் வழிகாட்டுதலில்,
ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி என். ரிபாய்டீன் தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore