யானை நடமாட்ட வழித்தடங்களை விடுவிக்க அரசு நடவடிக்கை

நாட்டில் நிலவும் மனித–யானை மோதல் பிரச்சினைக்கு நிலையான மற்றும் நடைமுறை தீர்வுகளை வழங்கும் தேசிய திட்டத்தின் கீழ், மூன்று முக்கிய யானை நடமாட்ட வழித்தடங்களை (elephant corridors) விடுவிக்க அரசு தீர்மானித்துள்ளது.

Wetahirakanda, Hadapanagala மற்றும் Koholankala ஆகிய மூன்று யானை வழித்தடங்கள் தற்போது முன்னுரிமையாக அடையாளம் காணப்பட்டுள்ளன.

சுற்றுச்சூழல் அமைச்சர் தம்மிக்க பத்தபேண்டி மற்றும் துணை அமைச்சர் அன்டன் ஜெயக்கொடி தலைமையில் நேற்று (08) அரசு தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டது.

பல ஆண்டுகளாக இவ்வழித்தடங்கள் சட்டவிரோத மற்றும் திட்டமிடப்படாத அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் அரசியல் ஆதரவுடன் வழங்கப்பட்ட நில ஒதுக்கீடுகள் காரணமாக முடக்கப்பட்டிருந்தன. இதனால் யானைகளின் இயல்பான இடமாற்ற பாதைகள் பாதிக்கப்பட்டு மனித–யானை மோதல் அதிகரித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இப்போது அந்த பகுதிகளில் உள்ள சட்ட, நிர்வாக மற்றும் சமூக சிக்கல்களை தீர்த்து, யானைகள் சுதந்திரமாக நகரும் வகையில் நிலங்களை மீட்டெடுக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, வனப்பகுதிகளில் “யானை உணவு மண்டலங்கள்” அமைக்கப்படவுள்ளன. இதில் புல் மற்றும் இயற்கை தாவரங்கள் வளர்க்கப்படுவதுடன், வறட்சி காலங்களில் நீர் தேவையை பூர்த்தி செய்ய குளங்கள் மற்றும் நீர்த் தொட்டிகள் புதுப்பிக்கப்படவுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore