கம்பஹா பகுதியைச் சேர்ந்த 28 வயது பெண் ஒருவர், பிரபலமான Brand பெயரை பயன்படுத்தி ஆன்லைன் வணிக திட்டம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றி நிதி மோசடியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த மோசடி மூலம் மொத்தம் ரூ. 426,300 அளவிலான பண இழப்பு ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
வடமேற்கு மாகாண கணினி குற்ற விசாரணைப் பிரிவு (Computer Crimes Investigation Division) துணை பிரிவு அதிகாரிகள் நேற்று (08) அவரை கைது செய்தனர்.
விசாரணையில், மோசடி செய்யப்பட்ட தொகையில் ரூ. 186,500 அவரது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக கணினி குற்ற விசாரணைப் பிரிவில் கிடைத்த புகாரின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.





