செப்டம்பரில் 24 புள்ளி டிரைவர் டிமெரிட் முறை பைலட் திட்டமாக அறிமுகம் – அரசு

வாகன ஓட்டிகளுக்கான 24 புள்ளி டிமெரிட் (Demerit) புள்ளி முறை செப்டம்பர் மாதத்தில் பைலட் திட்டமாக அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

சாலை பாதுகாப்பை மேம்படுத்தவும், போக்குவரத்து விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்கவும் கடுமையான அமலாக்க நடவடிக்கைகள் அவசியம் என அவர் தெரிவித்தார். தற்போதைய விதிமுறைகள் மட்டும் போதுமானதாக இல்லாததால், அபாயகரமான ஓட்டுநர் நடத்தை கட்டுப்படுத்த முடியாமல் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஆண்டு இலங்கையில் 2,750 சாலை விபத்து மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும், அதில் அதிகமானோர் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மற்றும் பாதசாரிகள் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

புதிய திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஓட்டுநருக்கும் 24 புள்ளிகள் வழங்கப்படும். போக்குவரத்து விதிமீறல்களுக்கு ஏற்ப இந்த புள்ளிகள் குறைக்கப்படும். மீண்டும் மீண்டும் விதிமீறல் செய்தால், ஓட்டுநர் உரிமம் இடைநிறுத்தம் உள்ளிட்ட தண்டனைகள் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த முறை அறிமுகப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், மோட்டார் போக்குவரத்து துறையில் ஏற்பட்ட நிர்வாக சிக்கல்கள் மற்றும் முறைகேடுகள் காரணமாக தாமதமானதாகவும் அமைச்சர் கூறினார்.

அதேவேளை, DMT துறையில் தற்போது நடைபெற்று வரும் டிஜிட்டல் மாற்றம், ஊழல் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் e-Motoring திட்டத்தின் மூலம் சேவைகள் நவீனமயமாக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore