சிவா இயக்கத்தில் தனுஷ்!

ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் தனது 55வது படத்தில் தற்போது நடிக்கிறார் தனுஷ்.

அவருக்கு ஜோடியாக சாய்பல்லவி, ஸ்ரீ லீலா நடிக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார்.

இந்த நிலையில் அடுத்தபடியாக சிறுத்தை சிவாவுடன் ஒரு ஆக்சன் படத்தில் தனுஷ் நடிக்கப்போவதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

இந்த படத்தின் கதை தனக்கு பிடித்து விட்டதால் 2027ம் ஆண்டு ஜனவரியில் நடிக்க கால்சீட் கொடுத்திருக்கிறார் தனுஷ்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

மேலும், சூர்யா நடிப்பில் சிவா இயக்கிய “கங்குவா” பொக்ஸ் ஆபிஸில் படுதோல்வி அடைந்ததை அடுத்து அஜித்குமாரை வைத்து ஐந்தாவதாக ஒரு படம் இயக்க அவர் திட்டமிட்டார்.

ஆனால் அதற்கான சூழ்நிலை இப்போதைக்கு இல்லை என்பதால் இப்போது தனுசை வைத்து தனது அடுத்த படத்தை இயக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார்.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore