கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) வருகை முனையத்தில், சட்டவிரோதமாக 26,600 வரியில்லா சிகரெட்டுகளை நாட்டுக்குள் கடத்த முயன்ற 40 வயதுடைய நபர் இன்று (13) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் (PNB) விமான நிலைய பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது, சந்தேகநபரிடம் இருந்து 133 கார்ட்டன்களில் அடைக்கப்பட்ட 26,600 சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டன.
கைது செய்யப்பட்டவர் மாரவில பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவும், விமான நிலைய பொலிஸாரும் முன்னெடுத்து வருகின்றனர்.





