12 நாட்களில் பரிமளா & கோ திரைப்படம் செய்துள்ள வசூல்!

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி கடந்த ஜூன் 5 ஆம் திகதி வெளிவந்த திரைப்படம் பரிமளா & கோ.

இப்படத்தில் பல ஆண்டுகளுக்கு பின் ஊர்வசி மற்றும் ஜெயராம் இணைந்து நடித்திருந்தனர். இவர்களுடைய காம்போவை திரையில் பார்ப்பதற்கே ரசிகர்கள் ஆர்வத்துடன் இப்படத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர்.

மேலும், இளம் நடிகைகள் சஞ்சனா மற்றும் அனந்திகா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இவர்களுடன் கேங்ஸ்டராக சாண்டி மாஸ்டர், பொலிஸ் அதிகாரியாக மிஸ்கின் நடிப்பில் பட்டையை கிளப்பியிருந்தனர்.

12 நாட்களை கடந்திருக்கும் பரிமளா & கோ திரைப்படம் உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, 12 நாட்களில் இப்படம் 17 கோடி ரூபா வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள குறைவான வசூல் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore