அன்சத் அஹமட்
சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட விசேட திடீர் சோதனை நடவடிக்கையில் 42க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கையில் பொலிஸ், போக்குவரத்து பொலிஸ், குற்றப் புலனாய்வு பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த அதிகாரிகள் இணைந்து ஈடுபட்டிருந்தனர்.
தலைக்கவசம் அணியாமை, சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்துதல், போக்குவரத்து விதிமுறைகளை மீறுதல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் குறித்த வாகனங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
போக்குவரத்து சட்டங்களை மீறுவோருக்கு எதிராக இவ்வாறான அதிரடி சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக பயணிக்குமாறு வாகன ஓட்டுநர்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.







