200 இற்கும் மேற்பட்டோர் பலி!

காங்கோ – உகாண்டாவில் எபோலா பரவல்!

காங்கோ மற்றும் உகாண்டாவில் எபோலா பரவல் தீவிரமடைந்துள்ளது. கடந்த மே 15 ஆம் திகதி இந்நோய் பரவலை ஆப்பிரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியது.

முதல் மாதத்திலேயே 200 இற்கும் மேற்பட்டோரின் உயிரைப் பறித்துள்ளது என ஆப்பிரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் காங்கோவின் கிழக்கு மாகாணமான இடுரியில் 90% இற்கும் அதிகமான பாதிப்புகள் இதுவரை பதிவாகியுள்ளன.

மேலும் இது உகாண்டாவிற்கும் பரவியுள்ள நிலையில், அங்கு 19 உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகளும் இரண்டு இறப்புகளும் பதிவாகியுள்ளன.

கடந்த வாரத்திலிருந்து நோய்த்தொற்று வழக்குகள் 38% அதிகரித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ சிகிச்சைகளோ இல்லாததால் இந்நோய் பரவல் அதிக அளவில் தீவிரமடைந்து வருகிறது.

இதுவரை 894 பாதிப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 35,000 வரை எட்டியுள்ளது.

இது 2000 ஆம் ஆண்டு நோய்ப்பரவலை விட மூன்று மடங்கு மோசமானதாகும் என்று ஆப்பிரிக்க நோய்க் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore