வெனிசுலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை 32 பேர் பலி

வெனிசுலாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 32 பேர் உயிரிழந்துள்ளதுடன், பெருமளவிலானோர் காயமடைந்துள்ளனர்.

வெனிசுலாவின் தலைநகர் கராகஸுக்கு அருகில் இன்று (25) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதுடன், இதன் தாக்கம் கொலம்பியாவிலும் உணரப்பட்டுள்ளது.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் (USGS) தகவலின்படி, மொண்டல்பான் பகுதியிலிருந்து 13.2 கிலோமீட்டர் ஆழத்தில், ரிக்டர் அளவுகோலில் 7.1 ரிக்டர் அளவாக இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

நிலநடுக்கம் காரணமாக கராகஸில் உள்ள கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளதாகவும், அங்கிருந்த மக்கள் அந்த இடங்களை விட்டு வெளியேறியுள்ளதாகவும் ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை தெரிவிக்கிறது.

இதற்கிடையில், வெனிசுலாவில் ரிக்டர் அளவுகோலில் 7.5 ரிக்டர் அளவிலான மற்றொரு நிலநடுக்கமும் ஏற்பட்டுள்ளதுடன், இதனால் தலைநகரிலுள்ள சில கட்டிடங்கள் இடிந்து விழுந்து கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளன.

இந்த இரு நிலநடுக்கங்களைத் தொடர்ந்து வெனிசுலா மற்றும் அதற்கு அருகிலுள்ள கரீபியன் தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore