அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், டிஜிட்டல் சேவை வரி (Digital Services Tax) விதிக்கும் எந்த நாட்டின்மீதும் 100% வரி (tariff) விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமது Truth Social தளத்தில் வெளியிட்ட பதிவில், பல ஐரோப்பிய நாடுகள் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களை இலக்காகக் கொண்டு டிஜிட்டல் சேவை வரியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அத்தகைய வரியை விதிக்கும் நாடுகள் மீது உடனடியாக 100% வரி விதிக்கப்படும் என்றும், அந்த நடவடிக்கை தற்போதைய மற்றும் எதிர்கால வர்த்தக ஒப்பந்தங்களையும் மீறி அமலுக்கு வரும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
அமெரிக்கா தொடர்ந்து, பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களை அநியாயமாக இலக்காகக் கொள்கிறது என கூறி, டிஜிட்டல் சேவை வரிக்கு எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், இலங்கை ஜூலை 1 முதல் வெளிநாட்டு டிஜிட்டல் சேவைகளுக்கு 18% VAT வரியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. ஆனால் இது குறிப்பிட்ட நிறுவனங்களை இலக்காகக் கொண்ட டிஜிட்டல் சேவை வரி அல்ல, மாறாக உள்ளூரில் பயன்படும் வெளிநாட்டு டிஜிட்டல் சேவைகளுக்கு விதிக்கப்படும் VAT என தெரிவிக்கப்பட்டுள்ளது.





