2026 FIFA உலகக் கிண்ணத்தின் குழுநிலைப் போட்டிகள் 16 நாட்கள் விறுவிறுப்பாக நடைபெற்றதைத் தொடர்ந்து, இரண்டாம் சுற்றான ரவுண்ட் ஆஃப் 32-க்கு முன்னேறும் 32 அணிகள் உறுதியாகியுள்ளன.
அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் இத்தொடரில், தகுதி பெற்ற அணிகளுக்கான இரண்டாம் சுற்றுப் போட்டி அட்டவணையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
ரவுண்ட் ஆஃப் 32 போட்டிகள் விரைவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், உலகின் முன்னணி அணிகள் அடுத்த கட்டத்துக்கான மோதல்களில் களமிறங்கவுள்ளன. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வரும் இந்த சுற்றில், பல பரபரப்பான போட்டிகள் நடைபெறவுள்ளன.






