யட்டியந்தோட்டை பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி (OIC), தமக்கு வழங்கப்பட்ட சேவைத் துப்பாக்கியை தவறவிட்ட சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஜூன் 26 ஆம் திகதி கடமைக்காக வழங்கப்பட்ட கைத்துப்பாக்கி மற்றும் 10 தோட்டாக்களை மீள ஒப்படைக்கத் தவறியதையடுத்து, அவர் ஜூன் 27 ஆம் திகதி சீதாவக்கபுர பிராந்திய குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட அதிகாரி நேற்று ருவன்வெல்ல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவரை ஜூன் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சீதாவக்கபுர பிராந்திய குற்றப் புலனாய்வு பிரிவும், சீதாவக்க மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் விசேட நடவடிக்கை குழுவும் இணைந்து மேற்கொண்டு வருகின்றன.





