பெட்ரோல் விலையை உடனடியாக குறைக்க வேண்டும் – அமெரிக்க பெட்ரோல் விற்பனையாளர்களுக்கு டிரம்ப் எச்சரிக்கை

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், பெட்ரோல் விற்பனையாளர்கள் உடனடியாக விலைகளை குறைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இல்லையெனில் “பெரிய பிரச்சனைகள்” ஏற்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

திங்கட்கிழமை தனது Truth Social தளத்தில் பதிவிட்ட டிரம்ப், எரிபொருள் விலையை உடனடியாக குறைக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

“Gasoline Retailers must get their Prices down, IMMEDIATELY,” என அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், “விலை உயர்த்துதல் சட்டவிரோதம்” எனவும், குறிப்பாக கலிபோர்னியா மாநிலத்தையும் வரிகளை குறைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

டிரம்ப் தனது பதிவில், பெட்ரோல் விலை கேலன் ஒன்றுக்கு சுமார் $2.50 அளவிற்கு குறைய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

இதற்கிடையில், கலிபோர்னியா ஆளுநர் கேவின் நியூசம் மற்றும் டிரம்ப் இடையே எரிசக்தி கொள்கை தொடர்பாக கருத்து முரண்பாடுகள் அதிகரித்து வருகின்றன. கலிபோர்னியா மாநிலம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களில் கவனம் செலுத்தி வருகிறது.

அதேவேளை, அமெரிக்க அரசு உள்நாட்டு எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கவும், தேவையான சில அவசர நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எண்ணெய் நிறுவனங்கள் அதிக விலை வைத்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், நீதித்துறை (DOJ) விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார்.

இந்த நடவடிக்கை, அமெரிக்காவில் எரிபொருள் விலை உயர்வு மற்றும் அரசியல் விமர்சனங்கள் அதிகரிக்கும் சூழ்நிலையில் வெளியாகியுள்ளது.

Tags

Share this post:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore